Published : 02 Apr 2022 07:11 AM
Last Updated : 02 Apr 2022 07:11 AM
பெங்களூரு: கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிரபல கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் (46) கடந்த ஆண்டுஅக்டோபர் 29-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது திடீர்மறைவு கர்நாடகாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று பெங்களூரு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சதாசிவ நகரில் உள்ள புனித் ராஜ்குமாரின் வீட்டுக்கு சென்று அவரது மனைவிஅஷ்வினி, சகோதரர் ராகவேந்திரா ராஜ்குமார் உள்ளிட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் புனித் ராஜ்குமாரின் படத்துக்கு மாலை அணிவித்து ராகுல் அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘புனித்ராஜ்குமாரின் இளம் வயது மரணத்தை கன்னடர்களால் இன்னும் மறக்க முடியவில்லை. அவரது நினைவுகள் நம்மிடையே எப்போதும் இருக்கும்''என கன்னடத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூருவில் நேற்று நடை பெற்ற கட்சி நிர்வாகிகள் கூட் டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்காக அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். இளைஞர்கள், பெண் கள், விவசாயிகளின் வாக்குகளை பெற கடுமையாக உழைக்க வேண்டும்.
கர்நாடக பாஜக ஆட்சி ஊழலில் திளைக்கிறது. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு 40 சதவீத கமிஷன் அரசாக திகழ்கிறது. இந்தியாவிலேயே ஊழலில்முதலிடத்தில் கர்நாடக மாநிலமே இருக்கிறது. ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றால் கர்நாடகாவின் தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT