நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராக, டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக மோதிலால் வோரா, ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ் மற்றும் சாம் பிட்ரோடா ஆகியோரும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இவர்களுக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு என்றப் பத்திரிக்கை 1938 ஆம் ஆண்டு ஜவஹர் லால் நேருவால் தொடங்கப்பட்டது. இது 2008 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிக்கைக்குச் சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதாக சுப்பிரமணியன் சுவாமி இவர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in