நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை
Updated on
1 min read

அமராவதி: ஆந்திராவில் அரசுப் பள்ளிகளில் இயங்கும் கிராம, வார்டு செயல கங்களை உடனே அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு 2020-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் எம்.எம்.நாயக், விஜயகுமார், கோபாலகிருஷ்ண திரிவேதி, கிரிஜா சங்கர், ராஜசேகர், சின வீர பத்ருடு, சியாமளராவ், ஸ்ரீலட்சுமி ஆகிய 8 பேர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கில், இந்த 8 ஐஏஎஸ் அதிகாரிகளும் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக உயர் நீதிமன்றம் கருதியது. இதனால் 8 அதிகாரிகளுக்கும் 2 வார சிறை தண்டனையும், அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

இதனால் பதறிப்போன ஐஏஎஸ் அதிகாரிகள் உடனடியாக தங்கள் தவறுக்கு மன்னிக்க வேண்டும் என நீதிமன்றத்திடம் வேண்டினர். இதனால், மனமிறங்கிய நீதிமன்றம், சிறை தண்டனையை ரத்து செய்தது. மாறாக சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளுக்குச் சென்று, மாதத்திற்கு ஒருமுறை அங்குள்ள மாணவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், அன்றைய தினம் மாணவ, மாணவியரின் 3 வேளை உணவுக்கான செலவையும் ஏற்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in