

தொழிலதிபர் விஜய் மல்லையா வின் மாநிலங்களவை எம்.பி. பதவி விரைவில் பறிக்கப்பட உள்ளது.
பல்வேறு வங்கிகளில் 9000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத மல்லையா தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட் டுள்ளது. அவரை கைது செய்ய மும்பை நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் அவரது மாநிலங் களவை எம்.பி. பதவியை பறிப்பது தொடர்பாக நாடாளுமன்ற ஒழுங்கு குழு நேற்று கூடி ஆலோ சனை நடத்தியது. அப்போது ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கு மாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
குழுவின் உறுப்பினர்களில் ஒரு வரான சரத் யாதவ் கூறியதாவது: மல்லையாவை பதவி நீக்கம் செய்ய ஒழுங்கு குழு முடிவு செய்து விட்டது. விரைவில் அவரது எம்.பி பதவி அதிகாரபூர்வ மாக பறிக்கப்படும் என்று தெரிவித்தார்.