கர்நாடாகா: தலித்துகளுக்கு கோயிலில் அனுமதி மறுப்பு

கர்நாடாகா: தலித்துகளுக்கு கோயிலில் அனுமதி மறுப்பு
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹொலெநர்சிப்பூர் அருகே சிகாரனஹள்ளி கிராமம் உள்ளது. இங்குள்ள பசவேஸ்வரா கோயிலுக்குள் தலித் மக்கள் நுழைய ஆதிக்க சாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பசவேஸ்வரா கோயில் தேர்த் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. தலித் மக்கள் கோயிலுக்குள் நுழையவும், திருவிழாவில் பங்கேற்கவும் அனுமதிக்க முடியாது என ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹாசன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷாஹா புர்வார்ட், துணை காவல் ஆணையர் விஜயா, ஹொலெநர்சிப்பூர் வட்டாட்சியர் மஞ்சுநாத் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இரு பிரிவினரிடையேயும் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையின் போது, தலித் மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். அதனை தடுப்போர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் தலித் மக்கள் மீதும், அதிகாரிகள் மீதும் கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காவல் கண்காணிப்பாளர் ஷாஹா புர்வார்ட், துணை காவல் ஆணையர் விஜயா, வட்டாட்சியர் மஞ்சுநாத் மற்றும் 10 போலீஸார், 2 பத்திரிகையாளர்கள் 20-க்கும் மேற்பட்ட தலித்துக்கள் காயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஹாசன் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் 35 பேரை கைது செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in