Published : 30 Mar 2022 08:50 AM
Last Updated : 30 Mar 2022 08:50 AM

370-வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் வெளிமாநிலத்தை சேர்ந்த 34 பேர் காஷ்மீரில் சொத்து வாங்கினர்: மக்களவையில் அமைச்சர் தகவல்

புதுடெல்லி: அரசமைப்புச் சட்டத்தின் 370-வதுபிரிவு நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு-காஷ்மீரில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த 34 பேர் சொத்துகளை வாங்கியுள்ளனர் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

மக்களவையில் நேற்று கேள்விநேரத்தின்போது பகுஜன் சமாஜ்கட்சி உறுப்பினர் ஹாஜி ஃபஸ்லுர்ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் அளித்த பதில்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகை அளிக்க வகையும் செய்யும்370-வது பிரிவு 2019-ல் நீக்கப்பட்டது. அதன்பின்னர் அங்குவேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும்

சொத்துகளை வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர்ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இதுவரை 34 வெளிமாநிலத் தவர் சொத்துகளை வாங்கியுள்ள னர் என ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேச நிர்வாகம் தெரிவித்துள் ளது. ஜம்மு, ரியாசி, உதம்பூர், கந்தர்பால் மாவட்டங்களில் இந்த சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

2019-ல் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புச் சலுகை வகை செய்யும் 370-வது பிரிவு நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் அங்கு புதிய நிலக் கொள்முதல் சட்டங்கள் அமலுக்குக் கொண்டு வரப்பட்டன.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x