Published : 11 Apr 2016 12:23 PM
Last Updated : 11 Apr 2016 12:23 PM

கொல்லம் கோயில் தீ விபத்து: 5 பேர் கைது

கேரள மாநிலம் கொல்லம் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 5 பேரும் பட்டாசு போட்டிக்காக பட்டாசுகளை வழங்கிய ஒப்பந்ததாரருடன் நெருங்கிய தொடர்புடைய தொழிலாளர்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணன் குட்டி, சுரேந்திரன் என்ற இருவருக்கு அந்த ஒப்பந்ததாரர் பட்டாசுகளை வழங்கியிருந்தார்.

கேரளத்தின் கொல்லம் அருகே உள்ள கோயிலில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதன் விளைவாக, தீயில் கருகியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் 110 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 350-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 307, 308 ஆகியனவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் குழுக்கள் கண்காணிப்பு:

கொல்லம் தீ விபத்தில் காயமடைந்த 350-க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை, அரசு மருத்துவக் குழுவினர் நேரடியாக சென்று கண்காணித்து அவர்களது நிலவரத்தை பதிவு செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x