

பெங்களூருவைச் சேர்ந்த 31 பெரும் பணக்காரர்கள் பிரிட்டன் தீவுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர் என பனாமா ஆவணங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு 'பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் ரகசிய ஆவணங்களை வெளி யிட்டது. இதில் வரிச் சலுகை வழங்கப்படும் வெளிநாடுகளில், ரகசியமாக சொத்துகளை வாங்கி யிருப்பதாக 500 இந்தியர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன.
பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் பெங்களூருவைச் சேர்ந்த 31 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் பிரிட்டன் வெர்ஜின் தீவுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர்.
இதில், ரூ.9,000 கோடி கடனைச் செலுத்தாமல் வெளிநாடு தப்பியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
யூ.பி. குழுமத்தில் பணி யாற்றிய அயனி குருஷி ரவீந்திரநாத் நெடுங்காடி, யூ.பி. ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அட்டிகுக்கே ஹரிஷ் பட் மற்றும் பிருந்தா பட் யுனைடட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் பணி யாற்றிய ஆனந்த் சுப்ரமணிய முரளி மற்றும் ருக்மினி ஆகியோர் பிரிட்டன் வெர்ஜின் தீவுகளில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். இது தவிர பெல்லாரியில் இயங்கும் 2 சுரங்க நிறுவனங்களும் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள் ளனர். இது போல 31 பெங்களூரு பணக்காரர்களின் முதலீடு குறித்து பனாமா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.