Last Updated : 27 Apr, 2016 09:31 AM

 

Published : 27 Apr 2016 09:31 AM
Last Updated : 27 Apr 2016 09:31 AM

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சொத்து மதிப்பு மிகைப்படுத்தப்பட்டுள்ளது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இறுதிவாதம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சசிகலா,சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே வாதிடுகையில் “தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் அரசு சான்று ஆவணத்தின்படி ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 306 சொத்துகள் இருக்கின்றன.

இதில் சுதாகரனுக்கும் இளவரசிக்கும் மட்டும் 63 சொத்து கள் இருக்கிறது. சுதாகரனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 38 லட்சத்து 31 ஆயிரத்து 961 என மதிப்பீடு செய் யப்பட்டுள்ளது. இதே போல இளவரசியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ. 6 கோடியே 91 லட்சத்து 81 ஆயிரத்து 200 என கூறப்பட்டுள்ளது.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை யின் மதிப்பீட்டு அதிகாரிகள் சுதாகரனும் இளவரசியும் பங்கு தாரராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், லெக்ஸ் பிராப்பர்டீஸ், ரிவர்வே அக்ரோ உள்ளிட்ட 6 நிறு வனங்களின் அசையும் அசையா சொத்துகளை மதிப்பீடு செய்தனர்.

கட்டிட மதிப்பு, வாகனங்களின் மதிப்பு, இயந்திரங்களின் மதிப்பு ஆகியவற்றை மிகைப் படுத்தி மதிப்பீடு செய்தனர். கட்டப்படாத கட்டிடங்களுக்கும் இயங்காத நிலையில் இருந்த வாகனங்களுக்கும்கூட மிகைப் படுத்தி மதிப்பீடு செய்யப்பட் டுள்ளது.

இதன் மூலம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் சொத்து மதிப்பு 12.90 கோடி எனவும் தனியார் நிறுவனங்களின் மதிப்பு ரூ. 4.60 கோடி எனவும் மதிப்பிட்டுள்ளனர்.

இதை அடிப்படையாக வைத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ஜெயலலிதாவின் பினாமியாக செயல்பட்டனர். இந்த சொத்துகள் யாவும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை'' என்றார். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆச்சார்யா ஆஜராக எதிர்ப்பு

மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ரத்னம், ''ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா அரசு தரப்பில் அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா ஆஜராக கூடாது.

ஆச்சார்யாவின் சுயசரிதை யில் ஜெயலலிதா வழக்கு தொடர் பாக பல்வேறு ஆட்சேபமான கருத்துகளை தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் அவர் உள் நோக்கத்துடன் செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஆச்சார்யாவின் நியமனத்தை ர‌த்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இம் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2 வார காலத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x