

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் பகுதி இன்று தொடங்குகிறது.
கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 16-ம் தேதி நிறைவு பெற்றது. இதன் 2-ம் பகுதி இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் மே 13 வரை நடைபெறும்.
இதில் உத்தராகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக விவாதம் நடத்தி குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி காங்கிரஸ் தரப்பில் மாநிலங்களவையில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இடதுசாரி கள், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் இருஅவைகளிலும் பெரும் அமளி ஏற்படக்கூடும் என்று தெரிகிறது.
இதுதவிர அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்ட விவ காரம், பதான்கோட்டில் தீவிரவாதி கள் தாக்குதல், இஷ்ரத் ஜஹான் வழக்கு, 10 மாநிலங்களில் நிலவும் வறட்சி குறித்தும் நாடாளுமன்றத் தில் பிரச்சினை எழுப்ப திட்ட மிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே மக்களவையை சுமுகமாக நடத்துவது தொடர்பாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். அப்போது உத்தரா கண்ட் விவகாரத்தை காங்கிரஸ் தலைவர்கள் எழுப்பினர். இந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியதாவது: உத்தராகண்ட் விவகாரம் உச்ச நீதிமன்ற பரி சீலனையில் உள்ளது. வரும் 27-ம் தேதி வரை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே அதுவரை இந்தப் பிரச்சினையை அவையில் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பரிசீலிக்கலாம்.
இதுதவிர வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். எனினும் மக்களவையை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்து ழைப்பு அளிக்கும் என்று நம்பு கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய மசோதாக்கள்
இந்த கூட்டத்தொடரில் மக்களவையில் 13 மசோதாக் களையும் மாநிலங்களவையில் 11 மசோதாக்களையும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதா முக்கியமானது ஆகும்.
இதற்கிடையில் குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில் “1951 முதல் இதுவரை 111 தடவை 356-வது சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 91 தடவை இச் சட்டப் பிரிவை காங்கிரஸ் அரசுகள் பயன்படுத்தின” என்று தெரி வித்தன.