2-ம் கட்ட நாடாளுமன்ற கூட்டத் தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு சுமித்ரா மகாஜன் ஏற்பாடு

2-ம் கட்ட நாடாளுமன்ற கூட்டத் தொடர்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு சுமித்ரா மகாஜன் ஏற்பாடு
Updated on
1 min read

நாடாளுமன்ற 2-வது கட்ட கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் அவையை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதி தொடங்கியது. ரயில்வே, பொது பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் மார்ச் 16-ம் தேதி கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2-வது கட்ட கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.

இந்தக் கூட்டத் தொடரில் உத்தராகண்ட்டில் காங்கிரஸ் அரசை கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது, பல மாநிலங்களில் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை உட்பட பல முக்கிய விஷயங்களை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் மக்களவையில் கிளப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கடிதம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இந்தக் கூட்டத் தொடரிலும் வழக்கம் போல் அமளி ஏற்படும் என்று தெரிகிறது. இதையடுத்து, கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவது குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். இதில் பங்கேற்குமாறு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆட்சியை மத்திய அரசு கலைத்தது குறித்து விவாதிக்க அனுமதி கோரி மாநிலங்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா கடிதம் கொடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in