

மக்களவையின் கண்ணியத்தைக் காக்க தவறிழைக்கும் எம்.பி.க் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: மக்களவையின் கண்ணியத்தைக் காக்க கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய தேவையிருப்பின் நிச்சயம் எடுக்கப்படும்.
எதிர்க்கட்சி உள்பட அனைத்து எம்.பி.க்களும் நாடாளுமன்றம் அமைதியாகச் செயல்பட ஒத்து ழைக்க வேண்டும். மக்களிடையே அதிகரித்துள்ள எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வது நமது கடமை.
தொல்லை தரும் எம்.பிக் களைக் கட்டுப்படுத்த, புதிய விதி முறைகளை உருவாக்க வேண்டிய தேவையிருப்பின், அதுவும் நிச்சயம் உருவாக்கப்படும்.
கடந்த காலத்தில் நாடாளு மன்றம் அதிகம் முடக்கப்பட்டது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
நாடாளுமன்ற நிலைக்குழு வின் நடவடிக்கைகள் ஊடகங்க ளுக்கு முழுமையாகத் தெரிவிக்கப் படுவதை விரும்ப வில்லை. அது தேவையற்றது. இக்கூட்டம் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விவாதத்தைப் போன்றது. ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன் அனல்பறக்கும் விவாதம் நடைபெறும். ஊடகத்தை அங்கு அனுமதிக்கும்போது, உறுப்பி னர்கள் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளவே விரும்புவர். இதனால், அக்குழுவின் உண்மை யான நோக்கம் சிதைவுறும்.
புதியவர்களுக்கு பயிற்சி
இந்த மக்களவையில் புதிய எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு அவை நடவடிக் கைகள் குறித்த பயிற்சியில், புதிய அம்சங்கள் சேர்க்கப்படும். இதன் மூலம் அவர்கள் கூடுதல் திறனுடன் பணியாற்றுவர். 16-வது மக்களவையில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும் என நம்புகிறேன். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.