

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற விவகாரங்களில், பாலின பாகுபாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என இந்தியன் யங் லாயர்ஸ் அசோசி யேசன் சார்பில் பொது நல மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் வி.கோபால கவுடா, குரியன் ஜோசப் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அ்போது நீதிபதிகள் கூறிய தாவது: பாலின நீதி அபாயத்தில் உள்ளது. நாங்கள் அரசியலமைப்பு கோட்பாடுகளின் கீழ்தான் முடி வெடுப்போம். மரபாக பின்பற்றப் படும் நடைமுறைகளைப் பொறுத்து முடிவெடுக்க முடியாது. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறக்கூடாது என பெண்களுக்கு அனுமதி மறுப்பீர்களா? எந்த ஒரு தடையும் அரசியல் சட்டம் சார்ந்து அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பொது இடத் துக்குள், கோயிலுக்குள் நுழை வதற்கு பெண்களுக்கு அனுமதி மறுப்பவர்கள் எந்த உரிமையின் கீழ் அதனைச் சொல்கிறார்கள். அரசியல் சட்டத்தில் இதுபோன்ற தடை அனுமதிக்கப்பட்டுள்ளதா? சிலை வடிவில் உள்ள தெய்வத்தை யார்வேண்டுமானாலும் வழிபடலாம். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை உள்ளது, அவருக்கு தலை வணங்க விரும்புகிறேன் என்பவர்களிடம், வரக் கூடாது என நீங்கள் சொல்ல முடியுமா? பழக்கத்தில் உள்ள நடைமுறைகள் சட்டத்தை விட சக்தி மிகுந்தவை அல்ல. தந்தை, குரு, கடவுளுக்கும் முன்பாக தாயைப் போற்றுகிறோம். எனவே, கோயிலுக்குள் நுழை வதற்கு பெண்களைத் தடை செய்ய முடியாது” எனத் தெரிவித்தனர்.
இவ்வழக்கு வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திருவாங்கூர் தேவஸ்தானம் எதிர்தரப்பாக வாதிடுகிறது.