லண்டன் அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடி மெழுகுச் சிலை

லண்டன் அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடி மெழுகுச் சிலை
Updated on
1 min read

உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரதமர் மோடியின் உருவச் சிலை நேற்று நிறுவப்பட்டது.

பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சிய கத்தின் தலைமையகம் உள்ளது. அங்கு மகாத்மா காந்தி, வின்சன்ட் சர்ச்சில் உட்பட உலகத் தலைவர்கள் பலரின் மெழுகுச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே உள்ளிட்டோ ரின் மெழுகுச் சிலைகளும் அருங் காட்சியகத்தை அலங்கரிக்கின்றன.

அந்த வரிசையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் மேடம் டுசாட்ஸ் அருங் காட்சியகத்தில் நேற்று நிறுவப்பட் டது. குர்தா, ஜாக்கெட் உடையுடன் இரு கை கூப்பி வணக்கம் தெரிவிப் பதுபோல அவரது சிலை செதுக்கப் பட்டுள்ளது. டெல்லியில் தயாரான இச்சிலை இங்கிருந்து லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

லண்டன் மட்டுமன்றி மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் அமைந் துள்ள சிங்கப்பூர், ஹாங்காங், பாங்காக் ஆகிய நகரங்களிலும் மோடியின் மெழுகு சிலை வைக் கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மோடி சிலையும் ரூ.1.45 கோடி செலவில் 4 மாத உழைப்பில் உருவாகியிருப்பதாக அருங்காட்சியக பொதுமேலாளர் எட்வர்ட் புல்லர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in