

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகுந்தராபாத்தில் மரக் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர். ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்படுள்ளார்.
செகந்தராபாத்தின் பொய்குடா பகுதியில் ஒரு பழைய மரக்கடையில் அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த 12 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 11 பேர் உடல் கருகி இறந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என்று காந்திநகர் சிறப்பு காவல் அதிகாரி மோகன் ராவ் தெரிவித்துள்ளார். மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
உயிரிழந்த 11 தொழிலாளர்களும் பிஹாரில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் எனத் தெரிகிறது.