உத்தராகண்ட் மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் மனு மீதான விசாரணை 11-க்கு தள்ளிவைப்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் மனு மீதான விசாரணை 11-க்கு தள்ளிவைப்பு
Updated on
1 min read

உத்தராகண்ட் மாநிலத்தில் காங் கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்த மனு மீதான விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக் கள் 9 பேரில் 6 பேர் கடந்த 30-ம் தேதி உயர் நீதிமன்றத்தை அனுகினர். அவர்கள் தங்கள் மனுவில், “உத்தராகண்ட் மாநிலத் தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு, சட்டப் பேரவை முடக்கி வைக்கப்பட்ட பிறகு எங்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதை செல்லாது என அறி விக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இந்த மனு 1-ம் தேதி (நேற்று) விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மனு மீதான விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு நீதிபதி யூ.சி. தியானி தள்ளிவைத்தார்.

உத்தராகண்டில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள அதிருப்தி எம்எல்ஏக்களிடம் முதல்வர் ஹரிஷ் ராவத் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ரகசிய வீடியோ கடந்த சனிக்கிழமை வெளியானது. இதன் அடிப்படையில் ஹரிஷ் ராவத் மீது குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரி எம்.ஷர்மா என்பவர் உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் பொது நல மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவை நேற்று ஆய்வு செய்த நீதிமன்றம், விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

இதனிடையே உத்தராகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஹரிஷ் ராவத் வழக்கு தொடர்ந்திருந்தார். இம்மனு மீதான இறுதி விசாரணை வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in