

பல்வேறு பிரச்சினை தொடர் பாக வழக்கு தொடுத்திருப் பவர்களுக்கு ஊதிய இழப்பு, வழக்கு செலவு உட்பட் ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.
பெங்களூருவைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன மான (என்ஜிஓ) தக் ஷ், டெல்லி யில் உள்ள தேசிய சட்ட பல்கலைக் கழகத்துடன் இணைந்து ‘அக்சஸ் டு ஜஸ்டிஸ் சர்வே’ என்ற பெயரில் ஓர் ஆய்வு நடத்தியது.
இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 24 மாநிலங்களில் உள்ள 305 கீழ் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்துள்ள 9,329 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இடம்பெற்றுள்ள சில அம்சங்கள் மட்டும் வெளியாகி உள்ளது. அதன் விவரம்:
கீழ் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் வழக்கு செலவுக்காக தினமும் ரூ.497 செலவிடுகின்றனர். இதுதவிர, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதன் மூலம் தினசரி ரூ.844 வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆக மொத்தம் தினமும் ரூ.1,341 செலவாகிறது. இதுவே, குற்ற வழக்குகளாக இருந்தால் தினசரி செலவு ரூ.1,444 ஆகிறது.
நாளை ஆய்வறிக்கை
அதாவது நாடு முழுவதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத் திருப்பவர்களின் ஆண்டு வருவாய் இழப்பு ரூ.50 ஆயிரம் கோடியாக உள்ளது. இதுதவிர வழக்கு செலவுக்கு மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி செலவிடுகின்றனர். ஆக மொத்தம் ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி 2015-16) மதிப்பில் 0.7 சதவீதம் ஆகும்.
இதைத்தவிர, வழக்கு தொடுத்தவர்களில் பாலின விகிதம், மத வாரியான விவரம், வழக்கு தொடுத்தவர்களின் சமூக-பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய இந்த ஆய்வறிக்கை சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.