

பூமியின் ஒரே துணைக் கோளான நிலவில் தண்ணீர் இருக்கும் முக்கிய கண்டுபிடிப்பை, சந்திரா யன் 1 திட்டம் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து நிலவில் விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள சந்திராயன் 2 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவுள்ளது.
இது குறித்து இஸ்ரா தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் நேற்று கூறியதாவது: சந்திராயன் - 2 திட்டத்தை முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட திட்டமாக நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம். இதற்கான லேண்ட் ரோவர் இயந்திரம் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்படும். பின்னர் 2017 டிசம்பரிலோ அல்லது 2018 மத்தியிலோ லேண்ட் ரோவர் இயந்திரம் நிலவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின் நிலவில் உள்ள மண் மாதிரிகளை சேகரித்து, லேண்ட் ரோவர் பூமிக்கு அனுப்பும். இவ்வாறு அவர் கூறினார்.
சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்த ஆரம்பத்தில் ரஷ்யா வுடன் இந்தியாவின் இஸ்ரோ கூட்டணி அமைத்திருந்தது. இதற் காக கடந்த 2010-ல் ரஷ்யாவின் விண்வெளி முகமையான ‘ராஸ்காஸ்மோஸுடன்’ உடன் பாடு ஏற்படுத்தப்பட்டது. இந்நிறு வனம் நிலவுக்கு அனுப்பி வைப் பதற்கான லேண்ட் ரோவர் இயந்திரத்தை தயாரித்து கொடுத் ததும், ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் அதை விண்ணில் செலுத்த திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் தற்போது முழுக்க, முழுக்க உள்நாட்டிலேயே லேண்ட் ரோவர் இயந்திரத்தை தயாரித்து சந்திராயன் 2 திட்டத்தை இந்தியாவின் சொந்த உள்நாட்டு திட்டமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.