Published : 19 Mar 2022 10:04 PM
Last Updated : 19 Mar 2022 10:04 PM

ஜம்மு-காஷ்மீரில் இன்னும் சில ஆண்டுகளில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பே தேவை இருக்காது: அமித் ஷா நம்பிக்கை

ஸ்ரீநகர்: இன்னும் சில ஆண்டுகளில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாகணங்களில் சிஆர்பிஎஃப் எனப்படும் துணை ராணுவப் படையின் பாதுகாப்பு தேவையிருக்காது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை ஜம்முவில் நடைபெற்ற மத்திய ரிசர்வ் காவல்படையின் 83 வது அமைப்பு தின விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். இந்த நிகழ்வில் அணிவகுப்பு மரியாதையையும் உள்துறை ஏற்றுக்கொண்டார்.

ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய உள்துறை செயலாளர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிஆர்பிஎப் அதன் அமைப்பு தினத்தை தில்லிக்கு வெளியே கொண்டாடுவது இதுவே முதல்முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மத்திய ஆயுத காவல்படைகளின் வருடாந்தர அணிவகுப்புகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் ஒரு பகுதியாக இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஜம்மு நகரில் சிஆர்பிஎப்-ன் வருடாந்தர அணிவகுப்பு நடைபெறுகிறது.

2014-ல் நரேந்திர மோடி பிரதமரான பின் மிக குறுகிய காலத்தில் ஜம்மு காஷ்மீரின் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஜனநாயக நடைமுறையின் ஒருபகுதியாக கிராமங்களில் தலைவர்கள், துணைத் தலைவர்கள் என 30,000 பேர் பிரதிநிதித்துவம் செய்வது ஜம்முகாஷ்மீருக்கும், தேசத்திற்கும் பெருமையான விஷயமாக உள்ளது.

வட்டார பஞ்சாயத்துக்களும், மாவட்ட பஞ்சாயத்துக்களும் உருவாக்கப்பட்டுள்ளன வளர்ச்சி நடைமுறையிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்த தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், மலைவாழ் மக்கள் ஆகியோர் . 370-வது பிரிவு நீக்கப்பட்டதன் காரணமாக புதிய சட்டங்கள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை பெறத் தொடங்கியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாதுகாப்பு படைகள் பெரிய வெற்றியை அடைந்துள்ளன. தொழில்வளர்ச்சி தொடங்கியுள்ளது. ரூ.33,000 கோடிக்கும் அதிகமாக முதலீடுகளை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பெற்றது. பிரதமரின் திட்டங்களை பூர்த்தி செய்ய பணிகள் விரைவாக நடைபெறுகின்றன. அனைத்து வீடுகளுக்கும் குடிநீரும், மின்சாரமும் வழங்கப்படுகிறது.

சிஆர்பிஎப் பற்றி நாடு எப்போதும் பெருமிதம் கொண்டிருக்கிறது. இந்தப் படைப்பிரிவில் உள்ள 3.25 லட்சம் வீரர்களும், உள்நாட்டு பாதுகாப்பிற்கும், தேசத்தின் பாதுகாப்பிற்கும் தங்களை மறுஅர்ப்பணம் செய்துகொள்ள வேண்டும்.

காஷ்மீர், நக்சல்கள் பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் CRPF பணிபுரியும் உறுதியுடன், அடுத்த சில ஆண்டுகளில், மூன்று பிராந்தியங்களிலும், CRPF ஐப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை மற்றும் மூன்று பிராந்தியங்களில் முழுமையான அமைதியைப் பேணலாம் என்று நான் நம்புகிறேன். நான் நம்பிக்கையுடன், அது நடந்தால், முழுப் புகழும் சிஆர்பிஎஃப்-க்குத்தான் சேரும்" என்று தெரிவித்தார்,

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

அப்போது காஷ்மீரில் கடந்த 2018ம் ஆண்டு, 417-ஆக இருந்த தீவிரவாத சம்பவங்களின் எண்ணிக்கை, 2021ம் ஆண்டில் 229 ஆக குறைந்துள்ளதையும், 2018ம் ஆண்டில் 91 ஆக இருந்த வீரர்களின் பலி எண்ணிக்கை, 2021ம் ஆண்டில் 42 ஆக குறைந்துள்ளதையும் மத்திய உள்துறை அமைச்சர் பாராட்டினார்.

தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காஷ்மீர் புகலிடமாகவும், நிதி உதவி பெறும் இடமாகவும் இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். தீவிரவாதத் தேடுதல் நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும், சிறையில் தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க, போதைப் பொருள் தடுப்புப் பிரிவை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும் உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். எல்லையில் தீவிரவாத ஊடுருவல் சம்பவம் நடைபெறாததை உறுதி செய்யுவும், பிரதமரின் தொலைநோக்கான அமைதியான மற்றும் செழிப்பான் ஜம்மு காஷ்மீரை அடையவும் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x