தனி நபராக சத்யநாராயணா உருவாக்கிய வனப்பகுதி
தனி நபராக சத்யநாராயணா உருவாக்கிய வனப்பகுதி

5 கோடி மரங்களால் தனி நபர் உருவாக்கிய வனம்

Published on

சூர்யாபேட்டை: தெலங்கானாவின் சூர்யாபேட்டை பகுதியில் தனி நபர் ஒருவர் தனது 70 ஏக்கர் நிலத்தில் சுமார் 5 கோடி மரக் கன்றுகளை நட்டு வனமாக மாற்றியுள்ளார்.

தெலங்கானாவின் சூர்யா பேட்டை ராகவபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியநாராயணா (68). சிறு வயதிலிருந்தே பறவைகளை வளர்ப்பது, மரம், செடி, கொடிகளை வளர்ப்பது இவரது விருப்பமாகும். தனக்கு சொந்தமான 70 ஏக்கர் விவசாய நிலத்தில் 5 கோடி மரக்கன்றுகளை நட்டார். 7 ஆழ்துளை கிணறுகளையும், 7 குட்டைகளையும் வெட்டினார். இதில் தாமரை குளம் அனை வரையும் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது இந்த இடம் முழுமை யான வனப்பகுதியாக மாறிவிட்டது. பல்வேறு இடங்களில் இருந்து பறவைகள், குரங்கு போன்ற விலங்குகள் வனத்தில் வந்து நிரந்தரமாக தங்கிவிட்டன. சுமார் 32 வகையான பறவைகள் இங்கு வசிக்கின்றன.

இது குறித்து சத்தியநாராயணா கூறியதாவது: சிறு வயது முதலே இயற்கை வளம் என்றால் மிகவும் பிடிக்கும். எங்களுக்கு சொந்தமான இந்த இடத்தில் பறவைகள் மற்றும் விலங்குகளின் தாகம் தீர்க்க 10 குட்டைகளை நிறுவ திட்டமிட்டேன். அதன் பிறகு, 5 கோடி மரக்கன்றுகளை நட்டு, வனப்பகுதியாக மாற்றிவிட்டேன். எனது நிலம் பறவைகள் மற்றும் விலங்குகளின் சரணாலயமாக மாறி இருப்பது மிகுந்த மகிழ்ச் சியை அளிக்கிறது.

சத்யநாராயணா
சத்யநாராயணா

இந்த சொத்தை எனது மகன்கள் கூட அனுபவிக்கக் கூடாது.இது விலங்குகள் மற்றும் பறவைகளுக்காக உரு வாக்கப்பட்டது. வனத்தின் அழகை பார்த்து பலர் அதிக விலைக்கு கேட்கிறார்கள். இதனை ஒரு போதும் விற்க மாட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சத்தியநாராயணா உரு வாக்கியுள்ள வனப்பகுதிக்கு எந்தவொரு தடுப்பு வேலியும் அமைக்கப்படவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in