நிலுவை வழக்குகளுக்கு விரைவான தீர்வு: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

நிலுவை வழக்குகளுக்கு விரைவான தீர்வு: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்
Updated on
1 min read

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரில் தேசிய நீதிபதிகள் பயிற்சி அகாடமியில் நேற்று நடைபெற்ற விழாவில் இது தொடர்பாக பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

நாடாளுமன்றம், அரசாங்கம், நீதிமன்றங்கள் ஆகிய 3 அமைப்பு களுக்கும் இடையே அதிகாரச் சமநிலையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. அதிகாரங் களை பிரயோகிப்பதில் இந்தச் சமநிலையை இந்த அமைப்புகள் எப்போதும் பேண வேண்டும். சட்டமன்றங்கள், அரசுகள் அதிகார மீறலில் ஈடுபட்டால், நீதிமன்றங்கள் மூலம் கடிவாளம் போட முடியும். என்றாலும் நீதிமன்றங்களை பொறுத்தவரை சுய ஒழுக்கமும் சுய கட்டுப்பாடும் மட்டுமே அதிகார வரம்பு மீறலை தடுப்பதாக அமையும்.

சட்டத்தின் தவறான பக்கத்தை விரைவாகவும் திறமையாகவும் கையாள்வதன் மூலம் சமூக ஒழுங்கை நிலைநாட்ட நீதித்துறை உதவுகிறது.

நீதித்துறை மீது மக்கள் கொண் டுள்ள நம்பிக்கை ஒருபோதும் பாதிக்கப்படக் கூடாது. நீதியை மக்கள் விரைவாகவும், எளிதாக வும், அதிக செலவின்றியும் பெற வேண்டும். நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நீதிமன்றங்களின் சுமை கூடியுள்ளது.

நாடு முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இதில் 24 உயர் நீதிமன் றங்களில் மட்டும் 38.5 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு முனைகளில் இருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் நிலுவை வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களில் 60 சதவீத நீதிபதிகளை மட்டுமே கொண்டு உயர் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்புவதில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது. இந்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ஏப்ரல் 12-ம் தேதி வரை 145 நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கொலீஜியம் விரைவாக செயல்படுவதையே காட்டுகிறது.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர், மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in