

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி மான், கரடி, புலி உள்பட எண்ணற்ற வனவிலங்குகளின் சரணாலயமாக உள்ளது. இதனால் பக்தர்கள் செல்லும் நடைபாதையில் வன விலங்குகள் நுழையாமல் இருப் பதற்காக சுற்றிலும் வேலி அமைக் கப்பட்டுள்ளது.
எனினும் ஒரு சில நேரங்களில் சிறுத்தை போன்ற கொடிய விலங்கு கள் பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதையில் புகுந்து விடுகின் றன. இதை தடுப்பதற்கான நட வடிக்கைகளில் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வனப் பகுதியில் இருந்து வழிதவறி வந்த கரடி ஒன்று மலைப்பாதையில் வேகமாக வந்த வாகனத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. கோடை வெயில் சுட்டெரிப்பதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி அந்த கரடி மலைப்பாதையில் வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவிக் கின்றனர்.