Published : 14 Mar 2022 06:34 AM
Last Updated : 14 Mar 2022 06:34 AM

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக நெருக்கடியில் இந்திய ஏற்றுமதியாளர்கள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் காரணமாக, இந்திய ஏற்றுமதியாளர்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உலகளாவிய அளவில் விநியோகச் சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்றுமதி - இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய சரக்குகள் குவிந்துள்ளன.ஆனால், ஏற்றுமதி செய்வதற்கு கன்்டெய்னருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், சரக்குகளை அனுப்புவதற்கான கட்டணம் 30% சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நிதின் கட்கரி கூறும்போது, ‘சரக்குகளை அனுப்புவதற்கான கட்டணம் உயர்வு, கன்்டெய்னர் தட்டுப்பாடு உள்ளிட்டகாரணங்களால் ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகம் வந்துள்ளபோதிலும் அதனால் பயனடைய முடியாத நிலை உள்ளது.

மேலும் சர்வதேச சந்தையில் போட்டி போடும் வகையில் இந்தியஏற்றுமதி துறையை மேம்படுத்த ரூ.46,000 கோடி முதலீட்டில் சரக்குப் போக்குவரத்து தொடர்பாக 35 பூங்காக்கள் அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது’ என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x