

பிஹார் மாநிலத்தில், குற்றம் சுமத் தப்பட்ட 8-16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சுமார் ஒரு மாத காலத்துக்கு ‘ரிமாண்ட் ஹோம்’ எனப் படும் சிறார் குற்றவாளிகளுக்கான தற்காலிக காப்பகத்தில் கண்காணிப்பில் வைக்கப்படுவர். அவ்வாறான இல்லத்திலிருந்து 6 சிறுவர்கள் தப்பியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவே அவர்கள் தப்பியுள்ளனர். நேற்று காலை அங்கு காவலில் வைக்கப் பட்டிருந்தவர்களின் எண்ணிக் கையை சரிபார்த்தபோது, அவர்கள் தப்பிய விவரம் தெரிய வந்ததாக, மாவட்ட ஆட்சியர் வீரேந்திர பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் தப்பியது தொடர்பாக, காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் சீலிடப்பட்டு, அச்சிறுவர்கள் தேடப்படுகின்றனர்.