

கேரள சட்டப்பேரவையின் 140 தொகுதிகளுக்கு வரும் மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நேற்று காலை 11 மணி முதல் வேட்புமனு தாக்கல் தொடங் கியது. முன்னாள் அமைச்சர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் முதல் நாளே வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பாஜக மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன், முன்னாள் தலைவர் வி. முரளிதரன், முன்னாள் நிதியமைச்சர் கே.எம்.மாணி, வனத்துறை அமைச்சர் டி. ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் மகள் பத்மஜா வேணுகோபால், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் (சிஎம்பி) சி.பி. ஜான் உள்ளிட்டோர் முதல் நாளே தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இத்தேர்தலில் 2 கோடியே 56 லட்சத்து 27 ஆயிரத்து 620 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். இவர்களில் ஒரு கோடியே 33 லட்சத்து ஆயிரத்து 435 பேர் பெண் வாக்காளர்கள்.