

‘‘சனி பகவான் கோயிலுக்குள் பெண்களை அனுமதித்ததால், பாலியல் பலாத்காரங்கள் அதி கரிக்கும்’’ என்று சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தா கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் சிங்கணாப்பூர் சனி பகவான் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பதில்லை. 400 ஆண்டு களுக்கும் மேலாக இந்த வழக்கம் இருந்தது. இதை எதிர்த்து பெண் கள் அமைப்பினர், உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றனர். இதையடுத்து கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ஏராளமான பெண்கள் கடந்த சில நாட்களாக கோயில் கருவறை வரை சென்று பூஜைகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், துவாரகா பீடத் தின் தலைவர் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தா கூறியிருப்ப தாவது: சனி கிரகம் பெண்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடி யது. சனி கோயில் கருவறைக்கு செல்லாமல் தவிர்ப்பது அவர் களுக்கு நல்லது. ஆனால், சனி பகவான் கோயிலுக்குள் செல்ல பெண்களுக்கு இப்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பாலியல் பலாத்காரங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு ஸ்வரூபானந்தா கூறியுள்ளார்.