5 மாநில பேரவைத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று கான்பூரிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த போலீஸார். படம்: பிடிஐ
உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று கான்பூரிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த போலீஸார். படம்: பிடிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தராகண்ட் ஆகிய5 மாநிலங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி முதல் கடந்த 7-ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: வாக்கு எண்ணிக்கை மையங் களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை 10 மணி முதல் வரத் தொடங்கும். வாக்கு எண்ணிக்கை செயல்பாடு வீடியோவில் பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் வரிசை எண்கள் அனைத்து அரசியல் கட்சி பிரதி நிதிகளிடம் காண்பிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கைக்காக 50 ஆயிரம் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். சுமார் 1,200 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உ.பி.யில் 750-க்கும் அதிகமான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 மாநிலங் களிலும் 650-க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை மைய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in