

கர்நாடக மாநில பாஜக தலைவராக இருந்த பிரஹலாத் ஜோஷி யின் பதவிக்காலம் கடந்த அக்டோபருடன் நிறைவடைந்தது.
உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கிய நிலையில் எடியூரப்பா, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா-வை கடந்த மாதம் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் பாஜக மேலிடம் கர்நாடக மாநிலத்தின் புதிய பாஜக தலைவராக எடியூரப்பா நியமிக் கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது. 4-வது முறையாக எடியூரப்பா கர்நாடக மாநில தலைவராக அறிவிக்கப்பட்ட தற்கு, அங்குள்ள பாஜக தலைவர்கள் வரவேற்பு தெரிவித் துள்ளனர்.
இது குறித்து எடியூரப்பா கூறுகையில், “என்னை மீண்டும் பாஜக தலைவராக அறிவித்த மேலிட தலைவர்களுக்கு நன்றியை தெரி வித்துக்கொள்கிறேன். பிரதமர் மோடியின் நல்லாட்சியை மக்க ளிடம் எடுத்துரைத்து, கர்நாடகா வில் கட்சியை வளர்த்தெடுப் பேன். கர்நாடக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2018-ம் ஆண்டு மீண்டும் பாஜக-வை அரியணையேற்றுவேன்'' என்றார்.
தென்னிந்தியாவில் முதல் முறையாக 2008-ம் ஆண்டு கர்நாட காவில் பாஜகவை ஆட்சிக் கட்டி லில் அமர வைத்தவர் எடியூரப்பா. கர்நாடகாவில் பெரும்பான்மை சமூகமான லிங்காயத்துக்களின் பிரதிநிதியான இவர், பாஜகவில் பலம் வாய்ந்த தலைவராகவும் மாறினார். கடந்த 2011-ம் ஆண்டு ஊழல் வழக்கில் சிக்கி, பதவியிழந்து 21 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். இதனால் பாஜக மேலிடம் இவரை கட்சியில் இருந்து ஓரம் கட்டியதால், 2013-ம் ஆண்டு கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கினார்.
கடந்த மக்களவை தேர்தலின்போது தனது கட்சியை கலைத்துவிட்டு, மோடி முன்னிலையில் மீண்டும் பாஜகவில் இணைந்தார். ஷிமோகா மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற்ற இவருக்கு, பாஜக தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரியில் எடியூரப்பா மீதான 15 வழக்குகளை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இன்னும் சில வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.