விரைவில் புதிய ஆளுநர்கள் நியமனம்- மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

விரைவில் புதிய ஆளுநர்கள் நியமனம்- மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
Updated on
1 min read

விரைவில் புதிய ஆளுநர்களை நியமனம் செய்ய வாய்ப்பிருக் கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ஆளுநர்களாக நியமிக்கப்பட்டவர்களை பதவி விலகுமாறு தற்போதைய பாஜக கூட்டணி அரசு அறிவுறுத்தியுள்ளது என்றும், அவர்களுக்கு பதிலாக பாஜக மூத்த தலைவர்களை நியமிக்க ஆலோசனை நடை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த நியமனங்கள் அனைத்தும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் ஜூலை 7-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ராஜ்நாத் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, “ஆளுநர்கள் மாற்றம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளை நான் மறுக்கவில்லை. ஆனால், அது தொடர்பாக அடுத்த 3 அல்லது 4 நாள்களில் உறுதியான தகவல்களை அளிக்கிறேன்” என்றார்.

சிபிஐ விசாரணை நடத்தி வரும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கோவா ஆளுநர் பி.வி.வான்சூ, மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் ஆகியோர் சாட்சி

களாக சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனர். இந்நிலையில், அவர்கள் இருவரையும் ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்துவீர்களா எனக் கேட்டபோது, “அதைப் பற்றி இப்போது எதையும் தெரிவிக்க முடியாது” என்றார்.

10 ஆளுநர்கள்

சத்தீஸ்கர், உத்தரப் பிரதேச மாநிலங்களின் ஆளுநர்கள் ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்ட னர். மேலும் சில ஆளுநர்களை பதவி விலகுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மொத்தம் 10 மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

நாகாலாந்து ஆளுநர் அஸ்வினி குமார், மேற்கு வங்க ஆளுநர் எம்.கே.நாராயணன் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in