Published : 07 Mar 2022 08:03 PM
Last Updated : 07 Mar 2022 08:03 PM

Exit Poll Results 2022 | ஆம் ஆத்மி வசமாகும் பஞ்சாப்: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்

புதுடெல்லி: ஐந்து மாநிலத் தேர்தல் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியைக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.

கடந்த இரண்டு மாதங்களாக நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மியும் தீவிரமாக தேர்தல் களத்தில் பணியாற்றி இருந்தது. தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் பலவும் ஆம் ஆத்மிக்கு சாதமாக வந்துள்ளன. அதன்படி, தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்கும் என தெரிகிறது.

இந்தியா டுடே-ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு: பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று இந்தியா டுடே-ஆக்சிஸ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. பஞ்சாபில் ஆட்சியமைக்க 59 தொகுதிகள் வேண்டும் என்கிற நிலையில் ஆம் ஆத்மி 76 - 90 தொகுதிகளைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரமாக

ஆம் ஆத்மி: 76 - 90 தொகுதிகள்

காங்கிரஸ்: 19 - 31 தொகுதிகள்

பாஜக: 1 - 4 தொகுதிகள்

சிரோன்மணி அகாலி தளம் - 7 - 11 தொகுதிகள்

நியூஸ்எக்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

ஆம் ஆத்மி: 56 - 61 தொகுதிகள்

காங்கிரஸ்: 24 - 29 தொகுதிகள்

பாஜக: 1-6 தொகுதிகள்

சிரோன்மணி அகாலி தளம்: 22-26 தொகுதிகள்

ரிபப்ளிக் டிவி - பி-மார்க் கருத்துக் கணிப்பு முடிவுகள்

ஆம் ஆத்மி: 62 - 70 தொகுதிகள்

காங்கிரஸ்: 23 - 31 தொகுதிகள்

அகாலி தளம்: 16 - 24 தொகுதிகள்

பாஜக: 1 - 3 தொகுதிகள்

சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

ஆம் ஆத்மி: 51 - 61 தொகுதிகள்

காங்கிரஸ்: 22 - 28 தொகுதிகள்

அகாலிதளம்: 20 - 26 தொகுதிகள்

பாஜக: 7 - 13 தொகுதிகள்

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

ஆம் ஆத்மி: 70 தொகுதிகள்

காங்கிரஸ்: 22 தொகுதிகள்

அகாலிதளம்: 19 தொகுதிகள்

பாஜக கூட்டணி: 5 தொகுதிகள்

பிற கட்சிகள்: 1 தொகுதி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x