

கேரளாவில் வலிமையான மூன்றாவது சக்தியாக பாஜக உருவெடுக்கும் என அக்கட்சியின் புதிய மாநில தலைவராக பொறுப் பேற்றுள்ள கும்மனம் ராஜசேகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிர பிரச்சாரகரான கும்மனம் ராஜ சேகரன் அண்மையில் கேரள மாநில பாஜக தலைவராக நியமிக் கப்பட்டார். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த தேர்தல் மூலம் கேரளாவில் பாஜக கால்பதிப்பதுடன் அரசியலில் மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கும்மனம் ராஜசேகரன் அளித்த பேட்டி:
இந்த சட்டப்பேரவை தேர்த லில் நாங்கள் வெற்றி பெறு வது மட்டுமின்றி, கணிசமான தொகுதிகளையும் கைப்பற்று வோம். முதல் முறையாக 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதனால் கேரளாவில் மூன்றா வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும்.
முஸ்லிம்களும் ஆதரவு
வெறும் இந்துக்களின் ஓட்டுக் களை வைத்து இதை சொல்ல வில்லை. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் கூட பாஜக வுக்கு ஆதரவு அளித்து வருகின்ற னர். கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸும், இடதுசாரிகளும் மாறி, மாறி மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். இதனால் மக்கள் வெறுப்பு அடைந்துள்ள னர். மாற்றத்தையும், மூன்றா வது சக்தியையும் எதிர்நோக்கி உள்ளனர்.
வேளாண் தேவைக்கு அண்டை மாநிலங்களை தான் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. இதற்கு கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளே காரணம். அரசியல் ரீதியிலான இந்த விவகாரங்களை மட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகளையும் மக்கள் மன்றத்தில் எடுத்துக்கூறி வாக்குகளை கேட்போம்.
பாஜக, காங்கிரஸ் இடையே ரகசிய உறவு இருப்பதாக மார்க்சிஸ்ட் தலைவர்கள் வதந்தி பரப்புகின்றனர். அதில் எள்ளளவும் உண்மையில்லை. இதேபோல் யாருக்கு வேண்டு மென்றாலும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அதுவும் தவறு தான். முன்னாள் கிரிக்கெட் வீரர் சாந்த் தொடர்ந்து கட்சியுடன் தொடர்பில் இருப்பவர். சி.கே.ஜானு, பழங்குடியின மற்றும் தலித் மக்களிடையே செல்வாக்கு மிகுந்த தலைவர். இதன் காரண மாகவே அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.