மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தாஜ் ஓட்டலில் இளவரசர் வில்லியம் தம்பதி மலரஞ்சலி

மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தாஜ் ஓட்டலில் இளவரசர் வில்லியம் தம்பதி மலரஞ்சலி
Updated on
1 min read

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர், மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இங்கிலாந்தின் பட்டத்து இளவரசர் வில்லியம், மனைவி கேத் ஆகியோர் ஒரு வார பயணமாக நேற்று பிற்பகல் இந்தியா வந்தனர். மும்பை வந்த அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மும்பை தாஜ் ஓட்டலில் தங்கினர்.

கடந்த 2008-ம் ஆண்டு தீவிரவாதி கள் தாக்குதலில் உயிரிழந்தவர் களுக்கு தாஜ் ஓட்டல் வளாகத்தில் நினைவிடம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு மனைவியுடன் சென்று வில்லியம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த புத்தகத்திலும் இரங்கல் குறிப்பு எழுதினர். அத்துடன் தாஜ் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது பணியில் இருந்த ஊழியர்களிடமும் இருவரும் உரையாடினர்.

அதன்பிறகு, மும்பையை சேர்ந்த மேஜிக் பஸ், டோர்ஸ்டெப், சைல்ட் லைன் ஆகிய 3 அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றனர். ஓவல் மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கேத்தும் பள்ளி குழந்தைகளுடன் கிரிக்கெட் ஆடினார்.

பின்னர் நேற்றிரவு வர்த்தக தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் அளித்த விருந் தில் இருவரும் கலந்து கொண்ட னர். இன்று டெல்லி செல்கின்ற னர். அங்கு மகாத்மா காந்தி நினை விடத்தில் அஞ்சலி செலுத்து கின்றனர்.

இந்தியாவில் ஒரு வாரம் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வில்லியம் தம்பதி, புகழ்பெற்ற தாஜ் மகாலை சுற்றிப் பார்க்க உள்ளனர். வில்லியமின் தாய் டயானா, 24 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்திருந்த போது தாஜ் மகாலை பார்த்து வியந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அசாமில் உள்ள காஸிரங்கா தேசிய பூங்கா மற்றும் அங்குள்ள கிராம மக்களின் வாழ்க்கை முறைகளை இருவரும் நேரில் பார்வையிடுகின்றனர். ஒரு வார சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இருவரும் பூடான் செல்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in