இந்தியரை வெளியேற்ற உதவுவதாக ரஷ்யா உறுதி

இந்தியரை வெளியேற்ற உதவுவதாக ரஷ்யா உறுதி
Updated on
1 min read

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள ரஷ்யாவின் பிரதிநிதி வாசிலி நெபென்சியா நேற்று முன்தினம் கூறியதாவது:

போரின் காரணமாக உக்ரைனில் ஏராளமான வெளிநாட்டவர் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக வெளியேற்றுவதற்கு ரஷ்யா உதவும். இதற்கான ஏற்பாடுகளை ரஷ்யா செய்துள்ளது. உக்ரைனில்சிக்கியிருக்கும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பெல்கரோட் மண்டலம் வழியாக வெளியேறலாம்.

அவர்களுக்காக அங்கு பஸ்கள்காத்திருக்கின்றன. அவர்கள் அதைப் பயன்படுத்தி ரஷ்யாவுக்குள் நுழையலாம். நெகோடீவ்கா, சுட்ஜா எல்லைகள் வழியாக அவர்கள் ரஷ்யாவுக்குள் வந்துதங்களது நாடுகளுக்கு விமானங்கள் மூலம் மாணவர்கள் செல்லமுடியும். மேலும் எல்லை சோதனைச் சாவடி பகுதிகளில் தற்காலிகமாக மக்கள் தங்குவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குளிரிலிருந்து காத்துக் கொள்வதற்கான ஹீட்டர் வசதி, உணவு விநியோகம் உள்ளிட்ட வசதிகளும் இங்கு செயய்யப்பட்டுள்ளன. மேலும் அங்கு மருத்துவ உதவிகளும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in