ஆப்ரேசன் கங்கா திட்டத்தில் ஒரே நாளில் 3,772 பேர் இந்தியா அழைத்துவரப்பட்டனர்

ஆப்ரேசன் கங்கா திட்டத்தில் ஒரே நாளில் 3,772 பேர் இந்தியா அழைத்துவரப்பட்டனர்

Published on

உக்ரைனில் சிக்கி தவித்த 3,772 இந்தியர்கள் ‘ஆப்ரேசன் கங்கா’ திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை அன்று இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.

போர் காரணமாக விமான சேவை முடங்கியுள்ளதால், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, போலாந்து ஆகிய நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். வெள்ளிக்கிழமை மட்டும் 17 விமானங்கள் மூலம் 3,772 இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்திய தனியார் விமான நிறுவனங்களின் 14 விமானங்கள் மூலம் 3,142 பேரும் விமானப்படையின் மூன்று சி-17 ரக விமானங்கள் மூலம் 630 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர். வெள்ளிக்கிழமை வரையில் மொத்தமாக 43 விமானங்கள் மூலம் 9,364 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் 11 சிறப்பு விமானங்கள் 2,200 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா திரும்பியுள்ளது. - பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in