

சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள புல்கட்டா கிராம வனப்பகுதியில் நக்ஸலைட் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப் பகுதியில் பல்வேறு படை களைச் சேர்ந்த கூட்டுப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இக்குழுவின் துணை தளபதி பஞ்ச்ராம் பகத் கவனக்குறைவாக ஒரு கண்ணிவெடியை மிதித்ததில் அது வெடித்தது. இதில் படுகாயமடைந்த பகத்தை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் அவர் உயிரிழந்தார். பகத் சிஏஎப்-பின் 10-வது படைப் பிரிவில் உதவி துணை ஆய்வாள ராக பணியாற்றி வந்தார்.