Published : 05 Mar 2022 07:30 AM
Last Updated : 05 Mar 2022 07:30 AM

உக்ரைன் தாக்குதலில் காயம்; மறுபிறவி எடுத்துள்ளேன் - இந்திய மாணவர் பேட்டி

புதுடெல்லி: உக்ரைனின் கீவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் உறுதி செய்திருந்தார். கீவ் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் தொலைபேசியில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது:

உக்ரைன் மீதான போர் தொடங்கியது முதல் நாங்கள் இங்கிருந்து வெளியேற முயற்சி செய்து வருகிறோம். என் சாவுக்குப் பிறகு மீட்பு விமானம் அனுப்புவதில் எந்தப் பலனும் இல்லை. கடவுள் எனக்கு 2-வது பிறவி தந்துள்ளார். மறுபிறவி எடுத்து வந்துள்ளேன். என்னை இங்கிருந்து வெளியேற்ற உத வும்படி இந்தியத் தூதரகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

உக்ரைனிலிருந்து வெளியேறு வதற்காக சக மாணவர்களுடன் எல்லையை நோக்கிச் சென்றேன். ஆனால், பாதுகாப்புக் காரணங் களுக்காக எங்களை வந்த வழியாகத் திரும்பிச் செல்லுமாறு வீரர்கள் கூறினர். நாங்கள் திரும்பும் வழியில் எங்கள் கார் மீது துப்பாக்கியால் சிலர் சுட்டனர். அதில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து எனக்குக் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் மறு பிறவி கிடைத்தது போல் உள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x