Published : 21 Apr 2016 09:54 AM
Last Updated : 21 Apr 2016 09:54 AM

தெலங்கானா காப்பகத்தில் குழந்தைகளுக்கு சூடு வைக்கும் அதிர்ச்சி வீடியோ அம்பலம்: 3 ஊழியர்கள் மீது அதிரடி நடவடிக்கை

தெலங்கானா மாநிலம், கரீம் நகர் மாவட்டத்தில் அரசு அனாதை குழந்தைகள் காப்பகம் அமைந் துள்ளது. இங்கு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 7 பேர் பராமரிக் கப்பட்டு வருகின்றனர். இவர்களை பராமரித்து வரும் பெண் ஊழியர்கள் 3 பேர் அவ்வப்போது குழந்தைகளை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம்பிடித்ததால், ஆத்திரம் அடைந்த ஒரு பெண் ஊழியர், கரண்டியை நெருப்பில் காய்ச்சி, 7 குழந்தைகளின் கைக ளிலும் மனிதாபிமானம் இல்லாமல் சூடு வைத்துள்ளார். இதில் தீக் காயங்கள் ஏற்பட்டதால் குழந்தை கள் 7 பேரும் அலறி துடித்துள் ளனர். அருகில் இருந்த 2 பெண் ஊழியர்களும் இந்த கொடுமையை தடுத்து நிறுத்த முன்வரவில்லை. குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரம், காப்பகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சி சமீபத்தில் எப்படியோ வெளியானதில் தெலங்கானா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், குழந்தைகளின் நிலை பற்றி அறிந்து கொள்ளவும், களத்தில் இறங்கிய சமூக ஆர்வலர்கள் சிலர், உடனடியாக அந்த காப்பகத்துக்கு நேரில் சென்றனர். அப்போது குழந்தை களின் கைகளில் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதை கண்டு மனம் வெதும்பிய சமூக ஆர்வலர்கள். தாய், சேய் நலத்துறைக்கும், மாவட்ட ஆட்சியரின் கவனத் துக்கும் விவகாரத்தை கொண்டு சென்றனர்.

அதன் அடிப்படையில் காப்பகத்துக்கு நேரில் வந்து குழந்தைகளிடம் உண்மையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட பெண் ஊழியர்கள் 3 பேரையும் அதிரடியாக பணி நீக்கம் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x