

பிரதமர் மோடியின் யோகா குருவாக கருதப்படுபவர் பெங்க ளூரூவை சேர்ந்த நாகேந்திரா. இவரது முயற்சியால் தான் கடந்த ஆண்டு உலக யோகா தின அறிவிப்பை ஐ.நா. வெளியிட்ட தாக கூறப்படுகிறது. இவர், ஹைதரா பாத்தை சேர்ந்த ஸ்ரீஅரபிந்தோ சர்வ தேச நிறுவனத்துடன் இணைந்து டெல்லியில் `தேசிய ஆரோக்கிய வாரங்கள்” என்ற பெயரில் யோகா விழா நடத்த திட்டமிட்டுள்ளார்.
இதை டெல்லி நேரு விளையாட் டரங்கில் நடத்த அனுமதி கேட்டு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பாணந்தா சோனுவாலுக்கு நாகேந்திரா கடிதம் எழுதியுள்ளார்.
வரும் ஏப்ரல் 25 முதல் மே 18-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள யோகா விழாவுக்கு அனுமதி அளிக்க விளையாட்டுத்துறை அமைச்சகம் தயங்குவதாக கூறப்படுகிறது. இதற்கு, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் டெல்லியின் யமுனை நதிக்கரையில் கடந்த மாதம் நடத்திய கலாச்சார விழாவால் எழுந்த சர்ச்சையே காரணம் எனத் தெரியவந்துள்ளது. இதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்திருந்தது.
இது குறித்து மத்திய விளை யாட்டுத் துறை அமைச்சக அதிகாரி கள் `தி இந்து’விடம் கூறியதாவது:
அதிக செலவில் பராமரிக் கப்பட்டு வரும் விளையாட்டரங் கத்தை 16 நாட்களுக்கு இது வரை யாருக்கும் நாங்கள் அளித்ததில்லை. இதில் நடைபெற உள்ள நிகழ்ச்சி பட்டியலில் சமஸ்கிருத வளர்ச்சி தொடர்பான ஒரு நிகழ்ச்சியும் உள்ளது. இதில் 12 நாட்களுக்கு 1005 செங்கற்கலால் ஆன அக்னி குண்டத்தில் 17 பண்டிதர்கள் யாகம் வளர்க்க இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் மைதானம் சேதம் அடைவது மற்றும் பிற பாதிப்புகள் குறித்து யோசித்து வருகிறோம்.
இவ்வாறு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விழாவுக்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆட்சி யில் உள்ள டெல்லி வளர்ச்சி ஆணையத்திடமும் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதனால் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து அனுமதி அளிக்கும் நிகழ்ச்சியாக இது இருக்கும். இதில் சிக்கல் வந்தால் இரு அரசுகளுக்கு இடையிலான அரசியல் மனக்கசப்பு மேலும் அதிகரிக்ககூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
எனினும், இதற்கு எப்படியும் அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் மத்திய ஆயுஷ் (ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) அமைச்சகத்துடனும் இணைந்து நடத்த அணுகப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசு அமைப்பும் இணைவதால் அந்த அமைப் பினருக்கு அரங்கத்தின் வாடகை யில் சுமார் ரூ.18 லட்சம் மீதமாகும் எனவும் கருதப்படுகிறது. அனுமதி கிடைத்தால் தொடக்க விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.