

பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மை இந்துக்கள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையில், இந்தியாவில் நீண்ட கால விசாவில் வாழும் பாகிஸ்தான் சிறுபான்மை இந்துக்கள் சொத்து வாங்குவதற் கும், வங்கிக் கணக்கு தொடங்கு வதற்கும் அனுமதிக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. இதுதவிர ஆதார், நிரந்த கணக்கு எண் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையின்படி, பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்களுக்கு 2 ஆண்டு இந்தியக் குடியுரிமை வழங்கவும் அதற்கான கட்டணத்தை அதிகபட்சமாகவும் குறைக்கும் அதிகாரம் சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 18 மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்படும்.
வங்கதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மை மக்கள் இந்தியாவுக்குள் 2014 டிசம்பர் 31-க்கு முன்பு நுழைந்திருந்தால் அவர்களின் பயணக் காலம் முடிவடைந்தாலும் தங்கியிருக்க அனுமதிக்க மத்திய அரசு கடந்த 2015 செப்டம்பரில் மனிதாபிமான அடிப்படையில் முடிவு செய்தது.
இந்தியாவில் தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த அகதிகளின் எண்ணிக்கை 2 லட்சம் இருக்கும் என கணிக்கப் பட்டுள்ளது.