

தூய்மை இந்தியா திட்டம் குறித்து, ஆண்டுதோறும் இரண்டு வார செயல்திட்டம் அமைத்து தங்களின் பங்களிப்பு குறித்து விளக்க வேண்டும் என அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2019 அக்டோபர் 2-ம் தேதிக்குள் தூய்மை இந்தியா திட்டத்தை முழுமை பெறச் செய்ய வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம். இத்திட்டத்தில் அனைத்து அமைச்சகங்களும் முழு ஈடுபாடு காட்ட வேண்டும் என அமைச்சரவை செயலாளர் பிரதீப் குமார் சின்ஹா கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அமைச்சகங்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இத்திட்டம் தொடர்பாக, 2 வார செயல்திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி, இத்திட்டத்தில் அந்த அமைச்சகங்களின் பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும். மேலும், தூய்மை இந்தியா சார்ந்த சிறப்பான பணிகளை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.