Published : 02 Mar 2022 08:30 AM
Last Updated : 02 Mar 2022 08:30 AM

பிரதமர் மோடியின் பாராட்டு உத்வேகம் அளிக்கிறது: தான்சானியாவின் கிலிபால் நன்றி

புதுடெல்லி: தான்சானியா நாட்டை சேர்ந்தவர் கிலிபால். இவர் தனது சகோதரி நீமா பாலுடன் சேர்ந்து பிரபல இந்திய திரைப்பட பாடல்களுக்கு உதட்டசைவு கொடுத்தும் நடனம் ஆடியும் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார்.

சமீபத்தில் இவரது வீடியோ ஒன்று வைரல் ஆனதை தொடர்ந்து,அவரைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மனதில் குரல்’வானொலி நிகழ்ச்சியில் கூறும்போது, “தான்சானியாவை சேர்ந்த கிலியும் நீமாவும் இந்திய இசையில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதன்மூலம் அவர்கள் மிகப் பிரபலமாக உள்ளனர். அவர்கள் எந்த அளவுக்கு உழைக்கிறார்கள் என்பது, அவர்களின் உதட்டசைவு மூலம் தெரிகிறது. கிலி, நீமாவின் அற்புதமான படைப்பாற்றலுக்காக அவர்களை பாராட்டுகிறேன். தான்சானியாவில் உள்ள இந்திய தூதரகத்திலும் கிலி பாலுக்கு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.

இதற்கு இன்ஸ்டாகிராமில் கிலி பால் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமருக்கு நன்றி. அவரது பாராட்டு 10 லட்சம் முறை உத்வேகம் அளித்தது” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x