

அடுத்த ஆண்டு முதல் நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கும் தர வரிசைப் பட்டியல் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களின், தேசிய மற்றும் சர்வதேச அளவி லான தரவரிசைப் பட்டியலை பல் வேறு தனியார் மற்றும் ஊடக நிறுவனங்கள் வெளியிட்டு வரு கின்றன. இவற்றில் பல உள் நோக்கத்துடன் வெளியிடப்படுவ தாக புகார் எழுகிறது. இதனால் முதல்முறையாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடந்த திங்கள்கிழமை தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பொறியியல், மேலாண்மை, மருந்தியல் ஆகிய படிப்புகளுக் கான தரவரிசை பட்டியலும் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையும் வெளியானது. இதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல் லூரிகளின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது உயர்கல்வி நிறுவனங்களை தேர்வு செய்ய மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாங்கள் இம்முறை வெளியிட்ட தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் வெறும் இரண்டு சதவீத கல்லூரிகள் மட்டும் இடம் பெற்றிருந்தன. கொல்கத்தா பல்கலைக்கழகம், பாம்பே பல் கலைக்கழகம் போன்ற பிரபல கல்வி நிறுவனங்கள் தங்கள் முழு விவரம் சேகரிக்க நேரமின்மையால் தரவரிசைப் பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே அடுத்த ஆண்டு முதல் அதிக பிரிவுகளின் கீழ் நாட்டின் அனைத்து வகை கல்வி நிலையங்களும் தரம் பிரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான பணியை மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய சான்றளிக் கும் அமைப்பான என்.பி.ஏ. மேற்கொள்ள உள்ளது.
நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்கள் கல்லூரி கட்டிட வசதி, ஆய்வுக்கூடங்கள், ஆசிரியர்களின் கல்வித் தகுதி, அனுபவம், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், ரேங்க் போன்ற அனைத்து விவரங்களையும் தங்கள் இணைய தளத்தில் பதி வேற்ற வேண்டும் என ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. ஆனால் பலர் உண்மையான தகவலை தெரிவிப்பதில்லை என புகார்கள் எழுந்தன. இதனால் அவர்களிடம் பெறும் விவரங்களை நேரில் உறுதி செய்த பின் தரவரிசை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது வெளியான தரவரி சைப் பட்டியலுக்கு அனைவரையும் விண்ணப்பிக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் நாட்டில் உள்ள சுமார் 38,000 கல்லூரி களில் 800-ம், 700 பல்கலைக்கழகங் களில் 223 மட்டுமே விண்ணப்பித் திருந்தன. இதனால், கல்லூரிகளுக் கான தரவரிசை வெளியிட வேண் டாம் என முடிவு செய்யப்பட்டது. எனினும் பொறியியல் கல்லூரிகள் சற்று அதிகமாக 4000-ல் 1500 விண்ணப்பித்திருந்தன.
ஏற்கெனவே நாட்டின் அனைத்து கல்வி நிலையங்களையும் என்.பி.ஏ. ஆய்வு செய்து நட்சத்திர அந்தஸ்து அளித்து வருகிறது. ஆனால் இது 5 ஆண்டுகளுக்கு ஒருறை என்பதால் மாணவர்களுக்கு அதிக பலன் கிடைக்காது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு வெளியிட இருக்கும் தரவரிசை பட்டியலால் உடனடி பலன் கிடைக் கும் என எதிர்பார்க்கப்படுகிறது.