

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜெயலலிதா தரப் பில் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதிட்டதாவது:
1996-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஜெய லலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டனில் உள்ள இரு கட்டிடங்கள், ஹைதராபாத் திராட்சை தோட்டம் மற்றும் அதில் கட்டப்பட்டிருந்த கட்டிடத்தின் மதிப்பையும் பன் மடங்கு மிகைப்படுத்தி மதிப்பீடு செய்தனர்.
இந்த விவகாரத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி'குன்ஹா தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் மதிப்பீட்டை முழுமையாக ஏற் காமல், தானாக முன்வந்து மதிப் பீட்டில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்கி மதிப்பீடு செய்துள்ளார். எவ்வித ஆதாரமும், சாட்சியமும் இல்லாமல் நீதிபதி குன்ஹா தானாக எடுத்த முடிவை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முழுமையாக நிராகரித்துள்ளார்.
இதே போல இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ள தங்கம், வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மீதான மதிப்பீடு அதிக மாக காட்டப்பட்டுள்ளது. இந்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட் கள் யாவும் 1991-ம் காலக்கட்டத் துக்கு முன்பாக வாங்கப்பட்டவை. அதிலும் சில நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது சம்பாதித்தவை என 1992-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சொத்து வரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வருமான வரித்துறையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் தங்க, வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட் கள் 1991-96 காலகட்டத்தில் வாங்கப் பட்டதாக கூறி, தமிழக லஞ்ச ஒழிப் புத் துறை அதிகப்படியான மதிப் பீட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இவ்வழக்கில் 3-ம் குற்றவாளி யாக சேர்க்கப்பட்டுள்ள சுதாகரின் திருமணத்துக்கான அனைத்து செலவுகளையும் ஜெயலலிதா செய்ததாக அரசுத் தரப்பு கூறியுள் ளது. ஆனால் தமிழ் கலாச்சாரப்படி திருமணத்துக்கான முழுச் செலவும் மணமகள் வீட்டாரை சேர்ந்தது. சுதாகரனின் மனைவி, நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தி என்ப தால், திருமணத்துக்கான அனைத்து செலவையும் சிவாஜியின் குடும் பத்தாரே செய்தனர்.
மணமகளின் தாய்மாமன் ராம் குமார் ரூ.98 லட்சம் செலவு செய்த தாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளார். இதை வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்ட போதும், நீதிபதி குன்ஹா ஏற்கவில்லை. திருமண செலவை ஜெயலலிதா செய்ததாக தீர்ப் பளித்ததை நீதிபதி முற்றிலு மாக நிராகரித்துள்ளார். இவ்வாறு அவர் வாதிட்டார்.
6 வாரம் ஒத்தி வைப்பு
இதனிடையே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்ததை ஆட்சேபித்து வழக்கறிஞர் பண்டிட் பரமானந்த் கட்டாரா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் 6 வார காலத்துக்கு ஒத்தி வைத்தது.