

வடகிழக்கு மாநிலங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.4 ஆக பதிவானது.
மேகாலயா, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1.12 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.
நில நடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. கிழக்கு கேரோ மலையில் நில நடுக்கத்தின் மையப்புள்ளி இருந்ததாக ஷில்லாங் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.