

குடும்ப வன்முறை வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பார்தி மீது டெல்லி நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி முன்னாள் சட்ட அமைச்சரான அவர் மீது மனைவி லிபிகா கடந்த ஆண்டு ஜூனில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பான வழக்கு டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத் தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் போலீஸார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய் தனர். அதில், கர்ப்பிணியான லிபிகா மீது சோம்நாத் பார்தி நாயை ஏவிவிட்டுள்ளார். இதனால் அவரது உயிருக்கும் கருவில் இருந்த குழந்தையின் உயிருக் கும் ஆபத்து ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார்.