புகையிலையே பயன்படுத்தாத நாகாலாந்து கிராமம்

புகையிலையே பயன்படுத்தாத நாகாலாந்து கிராமம்
Updated on
1 min read

நாகாலாந்து மாநிலத்தில் உள்ள கரிபெமா, நாட்டிலேயே புகையிலை பொருட்களை முற்றிலுமாக பயன்படுத் தாத முதல் கிராமம் என்ற பெயர் பெற்றுள்ளது.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை யொட்டி, கரிபெமா கிராம சபை அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுதொடர்பான அறி விப்பை மாநில முதன்மைச் செய லாளர் ஆர்.பென்சிலோ தாங் வெளி யிட்டார். கரிபெமா கிராம சபை, கிராம தொலைநோக்கு பிரிவு மற்றும் கிராம மாணவர்கள் சங்கம் ஆகியவை மேற்கொண்ட முயற்சியின் பலனாக அந்த கிராமம் புகையிலையில்லா கிராமமாக உருவெடுத்துள்ளதாக தாங் தெரிவித்தார்.

மது, புகையிலை பொருட் களை விற்பவர்கள், பயன்படுத்து பவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என கிராம சபை தீர் மானம் நிறைவேற்றி உள்ளது. இது போல், பொது இடங்களில் பீடி பிடிப்பவர்கள், பான் பராக் மற்றும் வெற்றிலை போடுபவர்கள், புகை யில்லா புகையிலை பயன்படுத்து வோருக்கு ரூ.500 அபராதம் விதிக் கப்படும் என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

நாகாலாந்தில் உள்ள கிராமங் களுக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவ தும் உள்ள அனைத்து பகுதிகளுக்குமே சிறந்த முன்னுதாரணமாக கரிபெமா கிராமம் விளங்குகிறது என தாங் தெரிவித்தார்.

நாகாலாந்தில் உள்ள ஆண்களில் 67.9 சதவீதத்தினரும் பெண்களில் 28 சதவீதத்தினரும் புகையிலையைப் பயன்படுத்துவதாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய புகையிலை கட்டுப் பாடு திட்ட துணை இயக்குநர் எம்.சி. லொங்கை தெரிவித்தார்.

புகையிலை தொடர்பான நோய் காரணமாக இந்தியாவில் நாளொன் றுக்கு 2,200 பேர் உயிரிழக்கிறார்கள். மேலும் புற்றுநோய் ஏற்படுவதற்கு புகையிலை பொருட்களே 40 சதவீதம் காரணமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in