

காசிரங்கா தேசிய பூங்கா.. வன விலங்கு சரணாலயம். இந்திய நாட்டின் பொக்கிஷங்களில் ஒன்று. உலகின் வேறு பகுதிகளில் காண முடியாத அரிய வகை ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் நிறைந்த வனப்பகுதி. இன்னும் பல ஆசிய யானைகள், புலி, காட்டெருமைகள், பறவைகள் நிறைந்த எழில் கொஞ்சும் வனப் பகுதி. வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரியதான அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்தியாவைச் சுற்றிப் பார்க்க விரும்பினால், காசிரங்கா தேசிய பூங்காவையும் நிச்சயம் பார்த்தே ஆக வேண்டும். அத்தனை எழில் நிறைந்த பகுதி அது.
உலகின் புராதன பகுதியாகவும் யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதனால் காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள அரிய வகை ஒற்றை கொம்பு காண்டாமிருகங் கள் உள்ளிட்ட விலங்குகளை காணவும், அதனை இயற்கை எழிலை கண்டு களிக்கவும் உலகின் பல நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு இருக்கின்றனர்.
இத்தனை இயற்கை செல்வங் கள் கொட்டிக் கிடப்பதால்தான், இந்திய சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது நிகழ்ச்சி நிரலில், காசிரங்கா தேசிய பூங்காவையும் சேர்த்துள்ளார். அதன்படி, வில்லியமும் அவரது மனைவி கேத் மிடில்டனும் நேற்று வனப்பகுதிகளை சுற்றிப்பார்த்து அதிசயித்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக வன அதிகாரிகள் உடன் சென்றனர். திறந்த ஜீப்பில் பல இடங்களை வில்லியம் தம்பதியினர் சுற்றுப் பார்த்தனர்.
பாரம்பரிய வரவேற்பு
குறிப்பாக ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம் மற்றும் புலிகள் உள்ள துங்கா மற்றும் ரோவ்மாரி வனப்பகுதியை சுற்றிபார்த்து ரசித்தனர். அப்போது காண்டா மிருகங்கள் வேட்டையாடப்படு வதை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், தேசிய பூங்காவை பாதுகாப்பதில் உள்ள சவால்கள் குறித்து அதிகாரி களிடம் அவர்கள் கேத்டறிந்தனர். மேலும் வனத்துறை மற்றும் பூங்கா ஊழியர்களின் குடும்ப பின்னணி பற்றியும் ஆவலுடன் கேத்டு தெரிந்து கொண்டனர்.
முன்னதாக காசிரங்கா தேசிய பூங்காவுக்கு வந்த அரச தம்பதிக்கு தலைமை வன பாதுகாவலர் ஒ.பி.பாண்டே மற்றும் கூடுதல் வன பாதுகாவலர் யாதவ் இருவரும் பாரம்பரிய முறைப்படி அசாம் மாநில வஸ்திரம் அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
பூங்காவை சுற்றிப் பார்க்க வருபவர்கள் தங்குவதற்கு அதை சுற்றிலும் இயற்கை சூழலில் பல ரெசார்ட்டுகள் உள்ளன. அசாம் வந்த வில்லியம் தம்பதியினர், ‘திப்லு ரிவர் லாட்ஜ்’ஜில் தங்கினர். காசிரங்கா தேசிய பூங்காவுக்கு அருகில் இந்த ரெசார்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது.