

சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டே வாடா மாவட்டம், மேளவாடா என்ற கிராமத்தில் நக்சல் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நிலக்கண்ணி வெடியை வெடிக்கச் செய்து சிஆர்பிஎப் வீரர்கள் 7 பேரை படுகொலை செய்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக சிஆர்பிஎப் தலைமை இயக்குநர் கே.துர்கா பிரசாத் நேற்று முன்தினம் இரவு சத்தீஸ்கர் வந்தார்.
அவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறும் போது, “தண்டேவாடா சம்பவத்தின் பின்னணியில் படைகள் நடமாட்டம் குறித்த தகவல் கசிந்துள்ளதாக கருதுகிறோம். ஏதோ ஓரிடத்தில் ஏதோ ஒரு நிலையில் இது ஏற்பட் டுள்ளது. இது துணை ராணுவப் படைகள் தரப்பில் இருந்து கசிந்துள்ளதா அல்லது வெளியில் இருந்து கசிந்துள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
கொல்லப்பட்ட வீரர்கள் 7 பேரும் சிவில் உடையில் சென்றனர். பாது காப்பு பணி தொடர்பாக அவர்கள் செல்லவில்லை. சிஆர்பிஎப் வாகனத்தையும் பயன்படுத்த வில்லை. அந்த சாலையில் இதற்கு முன் எந்த தாக்குதலும் நடந்த தில்லை. எனவே சாலை திறப்புக் கான படை அங்கு பயன்படுத்தப்பட வில்லை. இதுகுறித்து அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்” என்றார்.