

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் நேற்று வாதிட்டதாவது:
ஜெயலலிதா தனது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு ரூ.6.49 கோடி செலவு செய்தார் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. இந்த தொகை மிகவும் மிகைப்படுத்தப்பட்டது என பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி'குன்ஹா தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
சுதாகரனின் திருமணத்துக்கு ரூ. 1.5 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது. இதில் மணப் பெண்ணின் தாய்மாமன் ராம்குமார் ரூ. 98 லட்சம் செலவு செய்ததற் கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா தரப்பில் ரூ.27 லட்சம் மட்டுமே செல விடப்பட்டது.
இந்த செலவுகள் குறித்து ஜெயலலிதா வருமான வரி கணக் கில் குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ள செலவை அதிமுக தொண்டர்கள் செய்தனர் என்பதை வருமான வரித் துறை தீர்ப்பாயமும், நீதிபதி குமாரசாமியும் ஏற்றுக்கொண்டனர்.
நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு சந்தா திட்டம் மூலமாக ரூ. 14 கோடி வருமானமாக வந்தது. வருமான வரித்துறையின் கணக்கீட்டின்படி நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு 2,250 சந்தா தாரர்கள் மூலம் ரூ. 14 கோடி வருமானம் வந்தது என நிரூபிக்கப் பட்டுள்ளது.
ஜெயலலிதா திருமணமாகாதவர் என்ற அடிப்படையில் மனிதாபிமானம் மற்றும் பாதுகாப்பு ஆகிய காரணங்களால் மற்றவர்களும் மற்ற மூவரும் அவரோடு போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்தனர். நால்வரும் ஒரே வீட்டில் வசித்தாலும் போயஸ் கார்டனில் எந்த ஒரு நிறுவனமும் இயங்கவில்லை. நால்வரும் தனித்தனியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு தனியாக தனியார் நிறுவனங்களின் மூலம் வருமானம் வந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. நால்வரும் கூட்டுசதியில் ஈடுபட்டார்கள் என்ற வாதம் அர்த்தமற்றது.
ஜெ.வாதம் நிறைவு
இவ்வழக்கில் வருமான வரித் துறை ஆவணங்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கருத்தில் கொள் ளாதது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே இவ்வழக்கில் ஜெயலலிதா தரப்பு நிரபராதி என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தனது இறுதி வாதத்தை நாகேஸ்வர ராவ் நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி கள், “கர்நாடகா அரசும், ஜெய லலிதா தரப்பும் தம்முடைய இறுதி வாதங்களின் தொகுப்பை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்யுங் கள்''எனக்கூறி , அடுத்தகட்ட விசா ரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.