ஐக்கிய ஜனதா தள கட்சியின் புதிய தலைவரானார் நிதிஷ் குமார்

ஐக்கிய ஜனதா தள கட்சியின் புதிய தலைவரானார் நிதிஷ் குமார்
Updated on
1 min read

ஐக்கிய ஜனதா தளத்தின் புதிய தலைவராக பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய தலைவராக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்து வந்தவர் சரத் யாதவ். 3 முறை தலைவர் பதவிக்கான போட்டியில் வெற்றி பெற்றவர். தொடர்ந்து நான்காவது முறையாக அப்பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என அண்மையில் அவர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தேசிய தலைவர் பதவியை சரத் யாதவ் நேற்று ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் டெல்லியில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது பிஹார் முதல்வரும், மூத்த தலைவருமான நிதிஷ்குமார் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு சரத் யாதவ் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கட்சியை விரிவாக்கம் செய்ய ஐக்கிய ஜனதா தளம் திட்டமிட்டிருந்தது. இந்த சூழலில் நிதிஷ்குமார் தேசிய தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அக்கட்சி தொண் டர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தி யிருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in